எங்களைப் பற்றி 

ஒஸ்லோ தனியார் கல்வி நிறுவன பழைய மாணவர்கள் - 88ம் ஆண்டு 

1985 காலப் பகுதியில் ​பாபு மாஸ்டர் என்னும் மகேந்திரனால் யாழ்ப்பாணம் கச்சேரியடியில் ஆரம்பிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனம் , இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக் காலத்தி​ன் போது தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில் மூடப்பட்டது.
 
மற்றைய எல்லா மாணவர்களைப் போல் நாமும் பட்டாம் பூச்சிகளாக சிறகுவிட்டு பறந்த அந்த நாட்கள் எங்களை விட்டு விலக, எங்கள் மனம் மறுக்க, மறுபடி இணைந்திருக்கும் 12 நண்பர்களுடன் சேர்ந்து , பழைய  மாணவர்களாகிய நாங்கள் , மீண்டும்  தவறவிட்ட நண்பர்களை தேடி இணைக்க இந்த வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளோம்.
 
​1971 காலத்தில் பிறந்த நாங்கள் மற்றைய வகுப்பு மாணவர்களில் இருந்து சற்று வேறுபட்டோம். எங்கள் வயதை ஒத்த மற்றவர்கள், மாங்காய் , கொய்யாக்காய் போன்றவற்றை பறித்து உண்டு திரிந்த நாட்களில் , குளிப்பதற்கு இடம் தேடி , இயற்கையை ரசிக்க ஊர் ஊராக சென்று வந்த அனுபவம் எங்களுக்கு நிறைய உண்டு. 
 
நாட்டில் பதற்றம் இருந்தபோதும் சிறிய இடைவெளியில் எங்களை சந்தோஷப்படுத்த நாங்கள் என்றுமே தயங்கியது இல்லை.
 
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் எங்கள் நட்பு, எங்கள் 12 பேரையும் 30 வருடங்களின் பின் மறுபடி இணைத்திருக்கிறது.
 
எங்கள் 50 வயதில் மறுபடி சந்தித்துக் கொண்டோம். முதிர்ந்தவர்களாக எங்களைப் பார்த்து அனுபவித்த அந்த சந்தோசங்களை , பகிரக்கூடிய விடயங்களை உங்களுடன் பகிர்கிறோம்.
 
எங்களோடு படித்த அல்லது பழகிய விடுபட்ட மற்றவர்கள் இந்த இணையத்தை பார்வையிட நேர்ந்தால், எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
 
நன்றி.
ஒஸ்லோ அட்மின் 
 
Events
Recent Events

ஸ்ரீ நல்லையா , ஐந்தாம் ஆண்டு நினைவு

“தோல்வி” உனை தொற்றாத வியாதி! மீறி தொற்றியதனனாலா எமை விட்டு துலைந்து போனாய்? - உன் நண்பன் , சகலன் சிறி கனடா 26.03.2023

சுரேஸ் பரமசாமி

நண்பன் சுரேஸ் (Canada) பலநாடுகள் பிரிந்து சென்று வாழ்கை தெளிந்து நட்பை மறுபடி தேடும் காலம் நீண்ட காலமாக இருந்தாலும் , இனிய நண்பன் ஒருவனை இணைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முப்பத்து ஐந்து ஆண்டுகளின் பின் மறுபடி தொடர்பில் இணைத்தோம். ஒருவருடமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது , நன்றி மச்சான் உன்னுடைய தெளிவும் உன்னுடைய வாழ்க்கை சம்பந்தமான பார்வையும் எங்களுக்கு பிடித்திருக்கிறது.  பொறுமை கொள் , முன்னேறு... ஒஸ்லோ அட்மின்...

சுரேஸ் பரமசாமி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மச்சான் நண்பன் சுரேஸ் (Canada) 31.october.2025 இன்றுபோல் இனிமையுடன், ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் நீ நீடூடி வாழ நாங்கள் — ஒஸ்லோ நண்பர்கள் — இதயம் கனிந்த வாழ்த்துகள் தெரிவிக்கிறோம்! ஒஸ்லோ அட்மின்...

Vijayan - 54 years

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மச்சான் நண்பன் vijayan (London) 27.august.2025 இன்றுபோல் இனிமையுடன், ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் நீ நீடூடி வாழ நாங்கள் — ஒஸ்லோ நண்பர்கள் — இதயம் கனிந்த வாழ்த்துகள் தெரிவிக்கிறோம்! ஒஸ்லோ அட்மின்...

ஸ்ரீதர் நல்லையா. 05.02.1970-26.03.2018

மச்சான் சிறிதரா, நிழலில் ஓய்வெடுத்து அமைதியான உறக்கத்தில் நம் அனைவருக்கும் காத்திருக்கிறாய் நீ. நாம் ஒவ்வொருவராக மீண்டும் சந்திக்கும் போது உடைந்த எம் சங்கிலியை கடவுள் இணைப்பார் அதுவரைக்கும் காத்திரு. - ஒஸ்லோ நண்பர்கள்

எங்கள் ஐம்பது வயதில் மறுபடி சந்தித்தோம். பிரான்ஸ் , றொயே 2022

ஐந்து நாட்களும் ஐம்பது வருடம் இன்னும் கூட வாழ்ந்தது போல் இருந்தது. சிறுவயதில் நாம் கடந்து வந்த சில்மிஷங்கள், பகிடிகள், மலர முன்னைந்த உறவுகள், தண்டவாளம் போல் தடம் புரண்ட எங்கள் வாழ்க்கைப் பாதை. தாங்க முடியாத குடும்ப சுமை, வெளிநாட்டு நகர்வு, வெளிநாட்டு வாழ்க்கை என நாம் சிரித்தது , எங்கள் ஆயுளை ஆகக்குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது கூட்டியிருக்கும்.

November 2025

நவம்பர் 22 - பிரான்சஸ் சுரேசின் பிறந்தநாள் நவம்பர் 23 - வாணனின் பிறந்தநாள் வாழ்த்த விரும்பும் நண்பர்கள் எங்கள் whatsapp group இனூடு வாழ்த்துங்கள்.

எங்கள் அடுத்த சந்திப்பு 2026, தெற்கு ஐரோப்பாவில்.

இந்த சந்திப்பில் இன்னும் தவறவிட்ட நண்பர்களை இணைக்கும் எண்ணம் உண்டு.
News
Contact
Contact Us
*
*
*

Let’s Talk