எங்களைப் பற்றி
ஒஸ்லோ தனியார் கல்வி நிறுவன பழைய மாணவர்கள் - 88ம் ஆண்டு
1985 காலப் பகுதியில் பாபு மாஸ்டர் என்னும் மகேந்திரனால் யாழ்ப்பாணம் கச்சேரியடியில் ஆரம்பிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனம் , இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக் காலத்தின் போது தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில் மூடப்பட்டது.
மற்றைய எல்லா மாணவர்களைப் போல் நாமும் பட்டாம் பூச்சிகளாக சிறகுவிட்டு பறந்த அந்த நாட்கள் எங்களை விட்டு விலக, எங்கள் மனம் மறுக்க, மறுபடி இணைந்திருக்கும் 12 நண்பர்களுடன் சேர்ந்து , பழைய மாணவர்களாகிய நாங்கள் , மீண்டும் தவறவிட்ட நண்பர்களை தேடி இணைக்க இந்த வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளோம்.
1971 காலத்தில் பிறந்த நாங்கள் மற்றைய வகுப்பு மாணவர்களில் இருந்து சற்று வேறுபட்டோம். எங்கள் வயதை ஒத்த மற்றவர்கள், மாங்காய் , கொய்யாக்காய் போன்றவற்றை பறித்து உண்டு திரிந்த நாட்களில் , குளிப்பதற்கு இடம் தேடி , இயற்கையை ரசிக்க ஊர் ஊராக சென்று வந்த அனுபவம் எங்களுக்கு நிறைய உண்டு.
நாட்டில் பதற்றம் இருந்தபோதும் சிறிய இடைவெளியில் எங்களை சந்தோஷப்படுத்த நாங்கள் என்றுமே தயங்கியது இல்லை.
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் எங்கள் நட்பு, எங்கள் 12 பேரையும் 30 வருடங்களின் பின் மறுபடி இணைத்திருக்கிறது.
எங்கள் 50 வயதில் மறுபடி சந்தித்துக் கொண்டோம். முதிர்ந்தவர்களாக எங்களைப் பார்த்து அனுபவித்த அந்த சந்தோசங்களை , பகிரக்கூடிய விடயங்களை உங்களுடன் பகிர்கிறோம்.
எங்களோடு படித்த அல்லது பழகிய விடுபட்ட மற்றவர்கள் இந்த இணையத்தை பார்வையிட நேர்ந்தால், எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி.
ஒஸ்லோ அட்மின்