எங்கள் ஐம்பது வயதில் மறுபடி சந்தித்தோம். பிரான்ஸ் , றொயே 2022
ஐந்து நாட்களும் ஐம்பது வருடம் இன்னும் கூட வாழ்ந்தது போல் இருந்தது.
சிறுவயதில் நாம் கடந்து வந்த சில்மிஷங்கள், பகிடிகள், மலர முன்னைந்த உறவுகள், தண்டவாளம் போல் தடம் புரண்ட எங்கள் வாழ்க்கைப் பாதை. தாங்க முடியாத குடும்ப சுமை, வெளிநாட்டு நகர்வு, வெளிநாட்டு வாழ்க்கை என நாம் சிரித்தது , எங்கள் ஆயுளை ஆகக்குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது கூட்டியிருக்கும்.