ஸ்ரீ நல்லையா , ஐந்தாம் ஆண்டு நினைவு

“தோல்வி” உனை தொற்றாத வியாதி! மீறி தொற்றியதனனாலா எமை விட்டு துலைந்து போனாய்? - உன் நண்பன் , சகலன் சிறி கனடா 26.03.2023

நண்பா ஸ்ரீதர் 
எதற்க்கும் துணிந்தவன் என்பதாலா 
இதற்க்கும் துணிந்தாய்? 

எதையும் சாதிப்பேன் என்றாய், 
இதையும் சாதிப்பாய் என கனவிலும் எண்ணவில்லையேடா நண்பா!!! 

“தோல்வி” உனை தொற்றாத வியாதி!
மீறி தொற்றியதனனாலா எமை விட்டு துலைந்து போனாய்?

இங்கே ஒரு சொச்ச நண்பர்கள் வழியனுப்புகிறோம் - எம் மிச்ச நண்பர்கள் உனை வரவேற்க்க காத்திருப்பர் சென்றுவா.. 
எம் உயிர் தோழனே!!! 
உன் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனை பிராத்திக்கின்றோம்

உன் நண்பன் , சகலன் சிறி கனடா
26.03.2023

 

ஏன்டா சொல்லாமல் சென்றாய் சிறி??
உனக்கு  கண்ணீர் அஞ்சலி சொல்லவே மனம் கனமாகிறதடா..

பள்ளிக்காலத்தில்  தொடங்கிய நம் நட்பு ,
பழக பழக சுவையாய் இனித்தது ஏனோ ?
பழகிய நாட்கள் , நட்பில் நனைந்த நிமிடங்கள்
நினைவில் நின்று - என் நெஞ்சை கனமாக்குகிறதே ! 

பள்ளியில் தொடங்கி , பருவங்கள் கடந்து
பலநாள் கழித்து உன்னைக் குறித்து கேள்விப்பட்ட செய்தியால் பதறிப் போனேன்.
பங்காளி டேய் எங்கேயடா சென்றாய்  கட்டாயம் வந்துவிடு !
சொல்லிவிட்டு ஆவது  சென்றாயா?... 

நீ சென்ற செய்தி, அடுத்தவன் சொல்லி அறிந்தேன் ,. 

இன்று உனது அவசரப் புத்தியினால், சாவையும் அவசரத்தில் தெரிவு செய்தியே ஏன்டா சிறி இப்படிச் செய்தாய்,? 

உன்னுடன் பழகிய நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்,
முடியலடா. 

இன்று நீ எங்களை விட்டு பிரிந்த நாள்,
இன்று உன்னால் இணையத்தளம் ஊடாக இணைகிறோம் உன் உயிர் நண்பர்கள்.  ஏன்டா இப்படிச் செய்தாய்??? 

இப்படிக்கு உன்னால் இணையும்,
உன்னால் புலம்பும் , 

ஒஸ்லோ டியூஷன் நண்பர்கள்

கிஷேர் ஜெர்மனி